--- --:--:-- --

சென்னை டிஜிபி அலுவலகத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா

7

சென்னை வேளச்சேரியில் வண்டி மூலம் காய்கறி விற்று வந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும், அந்த நபரும் அவரது மகனும் வேளச்சேரி பகுதிகளில் நடமாடும் காய்கறி விற்று வந்துள்ளனர்.

 

அவர்கள் இருவருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் குடும்பத்தினர் 12 பேருக்கு தொற்று பரவியுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஏற்கனவே ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் எட்டு பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது.

 

சென்னையில் மின் துறை பணியாளர்கள் 17 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கேகே நகர் மின் வாரிய அலுவலகத்தில் ஏற்கனவே டெலிபோன் ஆபரேட்டருக்கு பாதிப்பு ஏற்பட்டு நிலையில் தற்போது மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon