--- --:--:-- --

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்! ஆனால் டைம் கண்டிஷன்!

1

தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளதையொட்டி கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. வயதின் அடிப்படையில் எந்தெந்த நேரத்தில் மதுபானம் வாங்க வரலாம் என்பது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 40 முதல் 50 வயதினர் மதுபானம் வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடைசி இரண்டு மணி நேரம் அதாவது பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதிற்கு உட்பட்டவர்களை அனுமதிக்கலாம் என்று மாவட்ட காவல் துறையினருக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் ஒவ்வொரு மதுக்கடைகளும் குறைந்தது இரண்டு காவலர்கள் மற்றும் இரண்டு ஊர் காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதை உதவி செய்ய வேண்டும் எனவும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை திறக்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon