மத்திய சுற்று சூழல் அனுமதி பெற்று சிவகங்கை கிராபைட் சுரங்க பணியினை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்

Publish by: எம்.மகேஸ்வரன் --- Photo :


சிவகங்கை அருகே கோமளிப்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கிராபைட் சுரங்க பணியினை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் சேந்தி உடையநாதபுரம், குமாரப்பட்டி, கோமாளிப்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்களுக்குட்பட்ட சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில், 3 மில்லியன் டன் கிராபைட் கனிம வளம் உள்ளது கண்டறியப்பட்டது.

 

1987 முதல் சுரங்கம் அமைத்து, தமிழ்நாடு கனிம நிறுவனம் கிராபைட் தாதுவை வெட்டி எடுக்கும் பணியினை மேற்கொண்டு ஆண்டு தோறும் 60 ஆயிரம் டன் கிராபைட் தாதுக்களை வெட்டி எடுத்தது. செறிவூட்டப்பட்ட கிராபைட் தாதுக்கள் மூலம் கிராபைட் மெக்னீசியம், கார்பன் கற்கள், மூசைகள், வெல்டிங் ராடுகள் மற்றும் பல முக்கிய பயன்பாடு பொருட்கள் செய்ய பயன்படுகிறது.

 

இவற்றின் மூலம் தமிழக அரசிற்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.136 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன் மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி கடந்த ஏப்ரல் 2019 உடன் நிறைவடைந்த நிலையில், உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

 

தமிழக அரசின் தீவிர முயற்சியால் மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதி தற்போது கிடைக்கப்பெற்று, இன்று தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் சுரங்க பணியினை துவக்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் கருப்பு தங்கம் என போற்றப்படும் கிராபைட், சிவகங்கை மாவட்டத்தின் கனவு திட்டமாக பார்க்கப்படுகின்றது. முதல்வரின் தீவிர முயற்சியால் அனுமதி கிடைக்கப்பெற்றதாகவும், இதனை மீண்டும் சுரங்கம் செயல்பட துவங்கியதால் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Leave a Reply