--- --:--:-- --

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மனு தள்ளுபடி !

5

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கத்தால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையை சேர்ந்த தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில் மதுக்கடைகள் இல்லாததால் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் மது பழக்கத்தை பலரும் கைவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.எனவே பொது முடக்கம் முடிந்த பின்னரும் மது கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணன் அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon