--- --:--:-- --

காய்கறி வரத்து குறைவு மீன் உணவு கொடி கட்டி பறக்குது.. குளம் இறங்கினால் மீன்களை அள்ளலாம்..!

15

சிவகங்கை மாவட்டம் கட்டிகுளம் கிராமத்தில் குளத்தில் இறங்கி மீன்பிடித்த மக்கள் அதிக அளவில் மீன்கள் அள்ளினர் .சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கிராமத்தில் காய்கறி வரத்து இல்லாததால் கிராமமக்கள் குளத்தில் இறங்கி மீன்பிடித்து சென்றனர். கட்டிகுளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சறறு உள்ளடங்கிய இக்கிராமத்திற்கு காய்கறிகள் வரத்து இன்றி கிராமமக்கள் சிரமப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் குளத்தில்  மீன்பிடிக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து இன்று, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக கையில் கிடைத்த வலைகளை வைத்து மீன் பிடித்தனர். கரைவலை, கொசுவலை, வேட்டி, சேலை உள்ளிட்ட அனைத்தையும் வைத்து மீன்பிடித்தனர்.

கெண்டை, கெழுத்தி, கட்லா, தேன் கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை அள்ளி சென்றனர். ஒவ்வொருவரும் தலா 2 கிலோ முதல் 5 கிலோ வரை மீன்களை அள்ளி சென்றனர். ஊரடங்கு காரணமாக காய்கறிகள் வராத நிலையில் மீன்கள் எதிர்பாராமல் அதிகளவு கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon