மூடப்பட்டிருந்த நகை கடையில் 10 அடி நீள மலைப்பாம்பு!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த நகை கடையில் இருந்து சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அந்த பகுதியிலுள்ள கடை கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த நிலையில் சுத்தம் செய்வதற்காக திறந்தபோது உள்ளே மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்து வனத்துறையினர் சரணாலயத்தில் ஒப்படைத்தனர். கடையில் இருந்த பாம்பின் 22 முட்டைகளையும் அதிகாரிகள் மீட்டுச் சென்றனர்.






