--- --:--:-- --

கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை வெளுத்து வாங்கும் கருமத்தம்பட்டி போலீசார்! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ !!!

1

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது கிடைக்காமல் ” குடிமகன்கள் ” திண்டாடி வருகின்றனர்.மேலும்,போதைக்காக மாற்று வழியை தேடி வருகின்றனர்.இந்த நிலையில் கோவையின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை,சிறுமுகை,கருமத்தம்பட்டி,அன்னூர்,சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் பெருகி வருகிறது.இதனை தடுக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருந்தும் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க முடியவில்லை.

 

இந்த நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவல் துறையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக முருகசாமி, மாரிராஜ், கருப்பசாமி, பாலன் உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.அதற்கும் முன்பாக தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும்,நேற்று காரமடை வனத்துறையினரால் வனப்பகுதிக்குள் அத்துமீறி கள்ளச்சாராயம் காய்ச்சிய புகாரில் நால்வருக்கு ரூ.16 ஆயிரம் விதித்த வனத்துறையினர் மேல் நடவடிக்கைகளுக்காக மதுவிலக்குத்துறையினரிடம் நால்வரை ஒப்படைத்தனர்.தொடர்ந்து கோவை புறநகர் பகுதிகளில் கள்ளச்சாராயம் தடையின்றி புழங்கி வருவதால் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

கள்ளச்சாராய வழக்கில் கைது செய்வோரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர்.இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கில் கருமத்தம்பட்டி காவல் துறையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை காவல் துறையினர் கொடூரமாக தாக்கும் சம பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சிய நபருக்கு “கை” நிறைய கவனித்த கருமத்தம்பட்டி போலீஸ்..! வீடியோ…

 

வீடியோவில் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிளாஸ்டிக் பைப்பை கையில் வைத்திருக்கும் காவலர் ஒருவர் கைகளை நீட்டச்சொல்லி கண்மூடித்தனமாக தாக்குகிறார்.அவரோ அடி வாங்கிய வேதனையில் துடிக்கிறார்.காவலரும் விடாமல் இது 7 . 50 அடி வாங்கணும் என்கிறார். கள்ளச்சாராயம் காய்ச்சுவியா ?அடித்துக்கொண்டே கேட்கும் காவலருக்கு வாங்க தான் செஞ்சேன்னு அப்பாவியாக சொல்கிறார் அவர்.வாங்குவியா ? குடிப்பியா ? என்று கேட்டுக்கொண்டே கைகளில் கொடூரமாக தாக்குகிறார் காவலர்.இது குறித்த வீடியோ தான் தற்போதௌ வெளியாகி சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்பது விதி.அப்படி இருக்க இது போன்று கொடூரமாக தாக்குவதற்கு அதிகாரம் கொடுத்தது யார் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon