BATCHED MASS TESTING – 10 பேருக்கு ஒரே தடவையில் கொரொனா சோதனை!

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிகம் பேருக்கு கொரொனா சோதனை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு BATCHED MASS TESTING என்ற முறையை பயன்படுத்தலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். BATCHED MASS TESTING என்றால் அதிகம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

 

அது என்ன BATCHED MASS TESTING என்ற கேள்வி எழலாம். பத்து பேரிடம் இரத்த மாதிரிகளை பெற்று அவற்றை ஒன்றாக கலந்து ஒரே தடவையில் பரிசோதனை நடத்துவதே BATCHED MASS TESTING . அவற்றில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து விட்டால் 10 பேருக்கான சோதனை ஒரே தடவையில் முடிந்துவிடும். ஒருவேளை பாசிட்டிவ் என்று வந்தால் பத்து பேருக்கும் தனித்தனியாக சோதனை நடத்தப்படும்.

 

BATCHED MASS TESTING மூலம் குறுகிய காலத்தில் அதிக பேருக்கு கொரொனா பரிசோதனை நடத்த முடியும். உதாரணமாக பத்துப் பத்துப் பேராக மொத்தம் 100 பேருக்கு 10 தடவையில் பரிசோதனை நடத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். பத்தில் எட்டு முடிவுகள் நெகட்டிவ் ஆகவும், 2 முடிவுகள் பாஸிடிவ் ஆகவும் வருகிறது என்றால் அந்த இரண்டு குழுவில் உள்ள 20 பேருக்கு மட்டும் தனித்தனியாக பரிசோதனை நடத்த வேண்டும்.

 

இதன் மூலம் முதலில் 10 பின்னர் 20 என மொத்தம் 30 டெஸ்டில் 100 பேரை பரிசோதித்து விட முடியும். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. ரத்த மாதிரிகள் மூலம் பரிசோதனை நடைபெறுவதால் ராபிட் டெஸ்ட் கிட் மூலம் BATCHED MASS TESTING ஐ மேற்கொள்ள முடியும். சீனாவில் இருந்து வாங்கப்பட்ட ராபிட் டெஸ்ட் கிட் தரக்குறைவு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. எனவே மீண்டும் ராபிட் டெஸ்ட் கிட் கிடைத்தால் மட்டுமே BATCHED MASS TESTING சாத்தியமாகும்.


Leave a Reply