--- --:--:-- --

வானவில் கிளிகள் பறந்து கொண்டிருக்கும் போதே திடீரென உயிரிழப்பு! வைரஸ் தொற்று காரணம்!

7

ஆஸ்திரேலியாவில் திடீர் வைரஸ் தொற்று காரணமாக நூற்றுக்கணக்கான வானவில் கிளிகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரிஸ்பன் நகர் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக வானில் பறந்து கொண்டிருந்த ஏராளமான வானவில் கிளிகள் அங்கிருந்து கீழே விழுந்து உயிர் இழந்தன.

 

இதையடுத்து கிளிகளின் உயிரிழப்பு குறித்து கிரிகிளிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். அப்போது கிளிகளுக்கு பக்கவாத நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மரக்கிளைகளில் உட்கார முடியாமல் தவிக்கும் கிளிகள் தொடர்ந்து பறக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

மேலும் உயிரிழந்த கிளிகளை சோதனைக்கு ஆளாக்கும் போது புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே கொரொனா தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வைரஸ் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon