பொது முடக்கத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சரிசெய்ய பத்திரப்பதிவு வருவாய் மிக அவசியம்
பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் கடும் நிதி நெருக்கடியை சரி செய்ய பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் அவசியம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது முடக்க நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு அளித்திருக்கும் அனுமதியை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
அதை பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டால் அதை சார்ந்திருக்கும் பத்திர எழுத்தாளர், விற்பனையாளர்கள், நகலகங்கள் இறங்க வேண்டிய சூழல் உருவாகும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருக்கும் 578 பதிவுத்துறை அலுவலகங்களையும் கொரொனா தொற்றில் இருந்து பாதுகாத்து கண்காணிப்பது இயலாது என்பதால் அனுமதியை ரத்து செய்ய கோரப்பட்டது.
விசாரணையின் போது கொரொனாவால் பொதுமுடக்கத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு நிதி நெருக்கடியை சரிசெய்ய பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட வேண்டியது அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்தது. மேலும் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிமுறைகள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியே பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.







