--- --:--:-- --

சென்னை மருத்துவ மாணவியின் திடீர் மரணம்! கொலையும் இல்லை, தற்கொலையும் இல்லை!

6.1

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவியின் திடீர் மரணம் பல்வேறு தரப்பினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரொனா தொற்றால் அவர் இறந்தாரா என்று சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. வேலூரை சேர்ந்த 22 வயது மாணவி பிரதீபா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்தார்.

 

மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கியிருந்து மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பணிக்கு செல்வதற்காக உட்புறம் பூட்டியிருந்த பிரதீபாவின் அறையை அவரது தோழிகள் இருவர் கட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாததால் காவலாளிகள் உதவியோடு அறை கதவு உடைக்கப்பட்டது. அங்கு சுயநினைவு இல்லாமல் இருந்த பிரதீபா உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

 

தற்கொலைக்கான அடையாளமோ, கொலைக்கான தடையும் தென்படாததால் பிரதீபா உயிரிழக்க காரணம் என்ன என்ற குழப்பம் கீழ்ப்பாக்கம் போலீசுக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றிய அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு உள்ளதோ அதனால் உயிரிழந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவி பிரதீபா மருத்துவமனையில் கொரொனாவார்டில் பணியாற்றினார் என வெளியான தகவலை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

 

கடந்த 18ஆம் தேதி முதல் மீண்டும் பணிக்கு வந்த பிரதீபா பிரசவ வார்டில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மாணவி தங்கியிருந்த விடுதியில் சுகாதாரத்துறை செயலர் பீலா ரஜேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். காவல்துறை இணை ஆணையர் சுதாகர், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

 

மகள் பிரதீபாவின் படிப்புக்காக பெரம்பூரில் தங்கியிருந்த பெற்றோர் பிரச்சனையால் சொந்த ஊரான வேலூரில் தங்கியிருக்கிறார்கள். மரணம் அடைவதற்கு சில மணி நேரங்கள் முன்புவரை மாணவி தீபா தனது பெற்றோருடன் பேசி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் மாணவியின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

மாணவியின் மரணத்திற்கு என்ன காரணம் என்று குழப்பம் நீடித்து நிலையில் பரிசோதனையின் முடிவு இறுதியானது. உயிரிழந்த மாணவி பிரதீபாவுக்கு கொரொனா இல்லை என வெளியான முடிவு போலீசாரையும் மருத்துவர்களையும் மேலும் குழப்பி உள்ளது. எனவே முழு பிரேத பரிசோதனை வெளியானால் மட்டுமே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

 

கொரொனாவும் இல்லை கொலையோ தற்கொலையோ கிடையாது எனில் மாணவி பிரதீபாவின் மரணம் எப்படி நடந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon