--- --:--:-- --

ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்க கருவி…!

10

ஊரடங்கை மீறி காரணமில்லாமல் வெளியே சுற்றுபவர்களை இடைவெளியுடன் பிடித்து செல்வதற்காக புதிய கருவியை உருவாக்கி இருக்கிறார்கள் சண்டிகர் காவல்துறையினர். ஊரடங்கு கட்டுபாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்களை பிடிக்கும் போது சில நேரங்களில் காவலர்கள் சிலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடுகிறது.

 

இதனால் முன் களத்தில் நின்று போராடும் காவல்துறையினரும், பொதுமக்களை அணுகுவதில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கட்டுப்பாட்டை மீறி வெளியே வருபவர்களை எளிதில் பிடிக்கவும் அவர்களிடம் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் சண்டிகரில் இருக்கும் காவல் துறையினர் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

 

5 அடி நீளம் கொண்ட அந்தக் கருவி மூலம் ஊரடங்கை மீறுபவர்களின் இடுப்பை சுற்றி வளைத்து அவரை அப்படியே எளிதாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். இதன் மூலம் பிடிபடுவரும் கருவியை பிடித்திருக்கும் காவலருக்கும் இடையே 5 அடி இடைவெளி கிடைப்பதால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக தெரிவிக்கிறார் சண்டிகர் காவல்துறை தலைமை காவலர் குரூப்தீப் சிங் .

 

தனிமனித இடைவெளிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கருவி காவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon