பூண்டு எண்ணெயில் கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்படும் மருந்து?
பூண்டு எண்ணெய் பயன்படுத்தி கொரொனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ள அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். முகாமிலுள்ள உயிரி தொழில்நுட்பத் துறை ஆய்வகம் கொரொனாவை கண்டறிதல், தடுத்தல், குணப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பயன்படும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
வேதியியல், வேதி பொறியியல், உயிரி தொழில்நுட்பம், மூலக்கூறு உயிரியல் ஊட்டச்சத்து நானோ தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் விரிவான ஆராய்ச்சி பின்புலம் கொண்ட அறிவியலாளர்களின் திறமையும் பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மருந்து கண்டுபிடிப் ஆராய்ச்சியில் பழங்களின் தோல் மற்றும் விதைகளில் இருந்து மதிப்புமிக்க மருத்துவக் கூறுகளை பிரித்தெடுக்கும் வாய்ப்புகளை கண்டறியவும் இயற்கையான பூண்டு எண்ணையை பயன்படுத்தி கொரொனா தொற்று பரவுவதை தடுக்கும் ஏசிஇ 2 எனும் புரத தடுப்பை உருவாக்கும் இந்த ஆராய்ச்சி உதவும் எனமத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் குல்காம் பகுதியில் காவல் துறையை சேர்ந்த ஒருவரை தீவிரவாதிகள் அவருடைய வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இதை அறிந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தீவிரவாதிகளை விரட்டிச் சென்று அந்த காவலரை பத்திரமாக மீட்டனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் டோடோ மாவட்ட வனப் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் குவியல் குவியலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






