இளைஞர்கள் விட்ட பட்டத்தால் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை மதுரவாயலில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம்பரத்தை அடுத்த மாநிலத்தை சேர்ந்த பரசுராமன் மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையோரம் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கால் வெளியே செல்ல முடியாமல் மாஞ்சா நூலில் காற்றாடி விடும் இளைஞர்களால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக புகார் எழுந்துள்ளது.
கொரொனாவை எதிர்ப்பதில் இந்தியர்களுக்கு உடல் திறனை விட மன வலிமை அதிகம் இருக்கிறது என சீனாவின் பொருளாதார நிபுணர் பாராட்டியுள்ளார். இந்தியாவில் இருக்கும் சீன மாணவர்களுக்காக டெல்லி சீனத் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறினார். மத வழிபாட்டு தளம் ஒன்றில் முகவுரை அணியாமல் மக்கள் திரண்டதை கண்டதாகக் கூறிய அவர் அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினார்.
இந்தியர்கள் மனவலிமை உடையவர்கள் என்று அவர் கொரொனா தொற்று இந்தியாவில் அதிகரித்தாலோ அது அமெரிக்காவை விட குறைவாக தான் இருக்கும் என்றும் இந்தியாவில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படலாம் என்று கூறியதுடன் 90 சதவீதம் பேருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






