மகள் முறையான சிறுமியை கர்ப்பமாக்கியவன் கைது…விசாரணையில் தாய் உடந்தை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய ஆட்டோ டிரைவரும் அதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் திருமணமாகி மனைவியை பிரிந்து ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் 15 வயது மகளையும் குமரேசன் கர்ப்பமாக்கவே இருவரும் சேர்ந்து கருவை கலைக்க தனியார் மருத்துவமனை சென்று உள்ளனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இருவரும் சிக்கினர்.

 

சத்தியமங்கலம் அருகே முட்டைகோஸ் பயிரிட்டு இருந்த விவசாய ஒருவர் ஊரடங்கால் அதனை விற்க முடியவில்லை என சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோவை பார்த்துவிட்டு கர்நாடக பாஜக எம்பி ஒருவர் முட்டைகோஸ் மொத்தத்தையும் கொள்முதல் செய்துள்ளார். கெட்ட வாடையை சேர்ந்த கண்ணையன் என்பவர் ஒரு லட்சம் முட்டைக்கோஸ் அறுவடைக்கு தயாராக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

இந்த காட்சியை பார்த்த பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி ஆன தேஜஸ்ரீ சூர்யா தமது தொகுதி மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க மொத்த முட்டைகோஸ்சையும் விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன விவசாயி கண்ணையன் தேஜஸ்ரீ சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Leave a Reply