--- --:--:-- --

மாஸ்க் தயாரித்து இலவசமாக வழங்கி வரும் 8 வயது சிறுவன்..!

9

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சொந்தமாக மாஸ்க் தயாரித்து இலவசமாக வழங்கி வரும் 8 வயது சிறுவனின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி தயாளன் என்பவரது மகன் விக்கி 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

 

கொரொனா பரவி வரும் சூழலில் முக கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்த அச்சிறுவன் தனது தந்தையின் தையல் கலையை காட்டன் துணிகளில் மாஸ்க் தயாரித்து சுற்று வட்டார பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.

 

கடலூர் மாவட்ட மக்கள் நாளை வெளியே வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அம்மாவட்டத்தில் 26 பேரில் கொரொனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் 8 பேர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளை முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

 

பால் மற்றும் மருந்தகம் மட்டும்தான் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் கிருமிநாசினி தெளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அப்போதுதான் கிருமிநாசினி தெளிக்கும் பணி விரைவில் முடிவடையும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon