--- --:--:-- --

ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

9

திண்டிவனம் அருகே சல்பியூரிக் ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் லாரியில் இருந்த ஆசிட் சாலையில் வழிந்து ஓடியது. ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள ரசாயன ஆலைக்குச் சென்ற டேங்கர் லாரியில் இருந்து பெரம்பூரில் வரும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

 

தகவலின் பேரில் விரைந்து வந்த லாரி உரிமையாளர் கிரேன் மூலம் அதனை அப்புறப்படுத்தினார். அதில் இருந்த ஆசிட்டை வேறு லாரிகளுக்கு மாற்றும் மிஷனரிகள் வரவழைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் நிறுத்தப் பட்டுள்ளது. விருத்தாசலத்தில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்வது வழக்கம். இதில் 500 காரணமாக விற்பனைக்கூடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறை நடைமுறைக்கு வந்தது.

 

ஆனால் அங்கு வரும் விவசாயிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமல் அதிகளவில் கூடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வேளாண் பொருட்கள் விற்பனை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய மாவட்ட அதிகாரி அன்புச்செல்வன் விற்பனை கூடத்தில் கொள்முதலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon