--- --:--:-- --

காரமடை நகர கழக தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவியாக 250 பேருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது !!!

18

கொரோனோ எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு,பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவின் கோர தாண்டவம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில் இன்று 2 பேர் பலியான நிலையில், உயிரிழப்பும் 17 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411-ல் இருந்து 457 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பில் இருந்து 46 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

இதனால் சாலையோரங்களில்,வசிப்போர்,ஆதரவற்றோர் மற்றும் வெளிமாநிலத்தினர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர்.இவர்களின் நிலையை கருத்தில் கொண்ட தமிழக அரசு சார்பில் தொழிலதிபர்களும், பொதுமக்களும் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியினை வழங்க வேண்டுகோள் விடப்பட்டது.இதனை ஏற்று பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும்,தொழிலதிபர்களும் தாமாக முன்வந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியினை அளித்து வருகின்றனர்.கோவையில் இதுவரை 11 கோடி ரூபாய் முதல்வரின் நிவாரண நிதிக்காக வந்துள்ளது.

மேலும்,தன்னார்வலர்கள் பலரும் தாமாக முன் வந்து சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்றோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் உணவுப்பொட்டலங்களையும்,அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

 

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் காரமடை நகர கழக தி.மு.க சார்பில் நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் கொரோனா நிவாரண உதவியாக அரிசி,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 250 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

 

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம்,கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் கல்யாணசுந்தரம்,வர்த்தக அணி அமைப்பாளர் புருசோத்தமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon