ஏ.சி.எஸ் மாடர்ன் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்
திருப்பூர், அனுப்பர்பாளையம், கலைவாணி தியேட்டர் அருகில் முத்துகோபால் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் என 50 குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டு வறுமையில் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பாலு, ஜெயஸ்ரீ, ராதாமணி ஆகியோர் தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம், தாமரைக்கோவில் எதிரே உள்ள ஏ.சி.எஸ் மாடர்ன் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் முத்துகோபால் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மாற்று த்திறனாளிகள், மனநலம் சரியில்லாதோர், கர்ப்பிணிகள், விதவைகள், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற 70 குடும்பங்களுக்கு பலசரக்கு, எண்ணெய், காய்கறிகள், பிஸ்கட், முகக்கவசம் என சுமார் ரூ 35000 மதிப்புள்ள பொருட்களை சங்கத்தின் தலைவர் பி.எஸ்.என்.எல் தங்கவேல், செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் குருராஜ் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் எல்.ஐ.சி மாணிக்கம், விக்னேஷ், அபர்ணா குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் 400 கிலோ அரிசி இலவசமாக வழங்கினர். மேலும் சிட்கோ, முதலிபாளையம் பகுதியில் உணவின்றி தவித்த 6 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இவர்களின் சேவையை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆனந்த் ரூ.1400, மெளனிஷ் ரூ. 350., சுவாதி ரூ.700 என தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்தனர்.
அதேபோல் அப்பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ரூ.1000 வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் அழகுராஜன், தனம், சதீஷ், சாந்தி, பேப்பர் ரமேஷ், அஸ்வின், ஹரி, கார்த்திக், டி.எம்.எப் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






