--- --:--:-- --

இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

9

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு இன்று செல்கிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் தங்கியிருந்து கொரொனா தடுப்பு பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் சென்னையிலிருந்து சாலை வழியாகச் சேலத்திற்கு செல்ல உள்ளார். அங்கிருந்தபடியே அது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஞாயிறு அன்று சென்னை திரும்புவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

தமிழகத்தில் தீவிரம் படிப்படியாக குறைகிறது என்றும் விரைவில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போதைய நிலையில் கொரொனா தடுப்பு பணி தான் முக்கியம் என்றும் அதற்கு தான் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

 

அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது என்று கூறிய முதலமைச்சர் தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரொனா தாக்கத்தின் வீரியம் குறைக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது என்றும் 180 பேர் கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 8,267 ஆக அதிகரித்துள்ளது என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்றும் உண்மையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

 

அரசின் நடவடிக்கைகளை திமுகவினர் குறை சொல்வது வேதனை அளிக்கிறது என்றும் தமிழகத்தில் தான் நோயை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் மற்ற மாநிலங்களில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon