--- --:--:-- --

வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர இயலாது!

4

இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க இயலாது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

மலேசியாவில் சிக்கியுள்ள 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி அங்கு சிக்கியுள்ளவர்களில் ஒருவரான முல்லை நாதன் என்பவர் சார்பாக வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வெளியுறவுத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில் கொரொனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகி விடும் எனவும். ஊரடங்கு சமயத்தில் வெளிநாட்டில் தங்கி உள்ளவர்களை இந்தியா திரும்ப கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

மனுதாரர் தரப்பில் சிறப்பு விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை சொந்த நாடு திரும்ப மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ளது போல இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon