பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம் கடையநல்லூர் அருகே கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்களை போலீசார் கைது செய்தனர். அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களுடன் நேற்றுபிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அப்போது பொதுவெளியில் கரும்பு வெட்டும் பெரிய பட்டா கத்தியால் கேக் வெட்டியுள்ளனர்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 4 பேரை தேடி வருகின்றனர்.







