--- --:--:-- --

அதிவேகமாக வந்த கார் பல அடி உயரத்திற்கு பறந்து விபத்து !

7

போலந்து நாட்டில் வெறுமையாக இருந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகி பல அடி தூரத்துக்கு பறந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள போது அரசின் உத்தரவை மீறிய ஓட்டுநர் ஒருவர் யார் கண்ணிலும் சிக்காமல் அதிவேகமாக தனது காரை செலுத்தி வந்துள்ளார். அப்போது சாலையில் வளைவதற்கு பதிலாக நடுவே வைக்கப்பட்ட ரவுண்டானாவில் கார் மோதி பல அடி உயரத்திற்கு கார் பறந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

கொரொனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை 134 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரொனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் கொரொனாவை தடுப்பதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், திரை உலக பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இதன்படி இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து 134 கோடியே 63 லட்சம் 54 ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் பணியாளர்கள் சார்பில் 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிதி வழங்கிய பொதுமக்கள் நிறுவனங்கள் திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon