ம.பி யில் ஆம்புலன்ஸ் வராததால் ஸ்கூட்டரில் அழைத்து செல்லப்பட்ட முதியவர்கள் 2 பேர் பலி !
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆம்புலன்ஸில் அனுப்ப படாததால் மோட்டார் சைக்கிளில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பட்வாலி சௌக்கியை சேர்ந்த 60 வயதான நபரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை அனுப்பிவைக்க குடும்பத்தினர் கூறினார்.
ஆனால் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்க அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் அவர் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் இறந்துள்ளார். இன்னொரு தனிமைப்படுத்தப்பட்ட இடமான கடக்புறா வில் 65 வயது நபர் ஒருவரும் இதேபோல் உயிரிழந்தார்.
சென்னையில் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவீதம் பேர் ஆண்கள் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களில் 68.78 சதவீதம் ஆண்கள் என்றும் 31.22 சதவீதம் பெண்கள் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 30 லிருந்து 39 வயதுக்குட்பட்டவர்கள் 44 பேர் கொரொனாவால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாற்பதில் இருந்து 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 39 பேரும், இதேபோல ஐம்பதிலிருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்கள் 39 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 வயதிற்குட்பட்ட குழந்தை ஒருவருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவு.ம் திருவிக நகர் மற்றும் தண்டையார்பேட்டையில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தருவது உள்ளது.






