--- --:--:-- --

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கோரிக்கை

5.1

கொரொனாவால் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் மத்திய கிழக்கில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் அவர்களின் தாயகம் திரும்ப முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

அவர்களை விமானம் மூலம் தாயகம் அழைத்து வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த 42 லாரி ஓட்டுநர்கள் மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல், தூத்துக்குடி, மதுரை, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 48 லாரி ஓட்டுநர்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் குஜராத் மாநிலம் சென்றனர்.

கடந்த 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்கள் மகாராஷ்டிராவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்குள்ள மாவட்டத்தில் கல்லூரி மாணவர் விடுதியில் அவர்களை தங்க வைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

அவர்களில் யாருக்கும் கொரொனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் உணவு, மாற்று உடை இன்றி தடுப்பதால் தங்களை மீட்க வேண்டும் எனவும் லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon