--- --:--:-- --

Zoom செயலியில் 5 லட்சம் கணக்குகள் திருட்டு..!

13

வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜும்யில் 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு உள்ளன. ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்ட சில நாட்களில் விளம்பரங்களின் எண்ணிக்கை கோடியை எட்டியது. இந்நிலையிலும் இந்த தளத்தை பயன்படுத்தும் இலட்சக்கணக்கான பயனாளிகளின் பெயர், கடவுச்சொல் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.

 

டார்க் வெப் எனப்படும் கண்டுபிடிக்க இயலாது இருள் வலைத்தளத்தினால் திருடப்பட்டு விற்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பயனாளரின் கணக்கிற்கும் வெறும் 15 பைசா அளவிற்கு சர்வதேச வலைதளங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு ஜும் செயலியைப் பயன்படுத்த மறுத்துவிட்டது.

 

தைவான், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூரிலும் தடை செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா நாசா மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவைகளும் தளத்தின் பயன்பாட்டை தடை செய்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon