ஐ‌பி‌எல் போட்டியை நடத்துவதா ? வேண்டாமா ?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரொனா வைரஸை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஊரடங்கை கடந்த மே 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஐபிஎல் போட்டிகளும் மே 3 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக் கப்பட்டது.

 

தற்போதைய நிலவரப்படி இந்த போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என்றும் போட்டியை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து மே 3ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply