காற்றில் 4 மீட்டர் பரவும் தொலைவுக்கு கொரோனா!
கொரொனா வைரஸின் மரபியல் கூறுகள் 4 மீட்டர் தொலைவு வரை காற்றில் பரவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை கையாளும் மருத்துவப் பணியாளர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
கொரொனா தொற்றியர் நகர மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசின் அமர்ஜின் இன்ஃபேக்ஸ்சஸ் டிசிஎஸ் என்ற மருத்துவ இதழ் கூறியுள்ளது.
காலணிகள், அடிக்கடி தொடப்படும் கதவு பிடிகள், படுக்கை விரிப்புகள், கம்ப்யூட்டர் மவுஸ், குப்பைகள் உள்ளிட்டவற்றிலும் வைரஸ்களின் மரபியல் கூறுகள் காணப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதேசமயம் வைரசின் இந்த மரபியல் கூறுகளுக்கு நோயைப் பரப்பும் திறன் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.







