வென்டிலேட்டர் உயிர் காக்கும் கருவியா? பயன் என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உயிர் காக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டு வரும் வென்டிலேட்டர் பலருக்கும் கை கொடுப்பது இல்லை என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் உயிர்காக்கும் மருத்துவ கருவியாக பார்க்கப்படுகிறது. கொரொனா வைரஸ் தொற்றால் மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்தித்த நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவி மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படும்.

 

இது நோயாளிகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது தான் பெரும்பாலான மருத்துவர்களின் வாதம். அதன் காரணமாகவே கொரொனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவையும் உற்பத்தியும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கொரொனா நோயாளிகளை வென்டிலேட்டரில் வைத்தாலும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சுவாசித்து வந்தவர்களின் உயிரிழந்தோர் எண்ணிக்கை நியூயார்க்கில் 80%, சீனாவின் உகான் நகரில் 86%, பிரிட்டனில் 66 சதவீதமாக உள்ளது. இதற்கு மருத்துவரீதியில் சொல்லப்படும் காரணங்கள் வெண்டிலேட்டர் பயன்பாடு குறித்து ஐயம் எழுகிறது.
கொரொனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் செயலிழந்து மூச்சு விட சிரமப்படும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படுகிறது.

 

வாய்வழியாக காற்று நுரையீரலில் இணைக்கப்பட்டு நேரடியாக ஆக்சிஜன் செலுத்தப்படும். சாதாரணமாக மூச்சு விடுவதில் சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வென்டிலேட்டர் பயன்படுத்தப்படும் சூழலில் நோயாளிகளில் பலர் பத்திலிருந்து பதினைந்து நாட்கள் கூட வென்டிலேட்டரில் இருக்க வேண்டியுள்ளது.

 

அதனால் ஏற்படும் மன அழுத்தம் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு திறன் குறைவு போன்ற காரணங்களால் வென்டிலேட்டரில் உள்ளவர்களுக்கு மரணம் நிகழலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இதனால் நியூயார்க் போன்ற நகரங்களில் கொரொனாவைரசால் பாதிக்கப்பட்டு பயன்படுத்துவதை பெருமளவு குறைக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Leave a Reply