--- --:--:-- --

கொரொனா பாதிப்பில் முதல் 10 இடங்களை நோக்கி நகரும் இந்தியா

2

கொரொனா பாதிப்பால் உலக நாடுகள் மொத்தமும் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவும் மெல்லமெல்ல பாதிப்பு பட்டியலில் முதல் 10 இடங்களை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது 15ஆம் தேதி தான்.

 

பிப்ரவரி 15ஆம் தேதி 3 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் சுமார் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் அதாவது மார்ச் 2-ஆம் தேதி வேகம் எடுக்கத் தொடங்கியது. மூன்றாக இருந்த எண்ணிக்கை அதிகரித்தது. மார்ச் 10ஆம் தேதி 62 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் மார்ச் 12ம் தேதியை இந்தியாவில் கொரொனா வைரஸால் முதல் நபர் உயிரிழந்தார்.

 

இந்நிலையில் ஒரு மாதத்தில் கொரொனா வைரஸின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 35 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சமூக பரவல் என்ற மூன்றாம் நிலை ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் .

 

மொத்தம் 7,447 பேர் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் 643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon