--- --:--:-- --

ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கிய குற்றவியல் வழக்கறிஞர்கள் !!!

3

கொரோனா எதிரொலி காரணமாக மத்திய , மாநில அரசுகள் 144 தடை உத்திரவை ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தியது. இதனையடுத்து தினக்கூலிகள், வட மாநிலத்தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாநில அரசு இவர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக அரசு கலைக்கல்லூரி சாலையில் நீதிமன்றத்தின் முன்பு பீட்ரூட், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய், கீரைகள், முருங்கைகாய் என ஒரு லட்சம் மதிப்பிலான காய்கறிகளை 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள் வழங்கினர்.

தாமதமாக வந்த மக்கள் முருங்கை காயை மட்டுமே வாங்கிச்சென்றனர். பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அடுத்து அடுத்த வாரமும் இலவசமாக காய்கறிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon