--- --:--:-- --

வீட்டை பூட்டி தந்தையை வெளியே தவிக்க விட்ட மகன்!

5

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சேலத்தில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு தள்ளாத வயதில் உள்ள தந்தையை வீதியில் நிற்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 94 வயதான முதியவர் கடந்த 5 ஆம் தேதி தனது வீட்டு வாசலில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தார்.

 

இதனை கண்ட மக்கள் விசாரித்ததில் அப்போது கிடைத்த தகவல் அனைவரையும் வேதனை அடைய வைத்துள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக முனுசாமி தனது வீட்டை பெரிய மகன் சௌந்தரராஜனின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் முனுசாமியின் மனைவி கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 

முதியவரின் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் தாயின காரியங்களுக்காக வந்திருக்கின்றனர். அப்போதுதான் அந்த அம்மாளின் இறுதிச் சடங்கிற்காக வந்த தங்களை வீட்டிற்குள் சௌந்தரராஜன் அனுமதிக்கவில்லை என கூறுகிறார். முதியவரின் மகள் ஊர் மக்கள் ஆதரவோடு தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட முனுசாமி தன் மகள் மற்றும் இளைய மகனும் அங்கிருந்து சென்று விட்டனர்.

 

இந்நிலையில் மூத்தமகன் சௌந்தரராஜன், தந்தையை தன்னுடன் சென்னைக்கு அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றி விட்டு அவரது துணிகளை கொல்லைப்புறமாக பதுக்கி வைத்து வீட்டை பூட்டிவிட்டு முதியவரை வெளியில் நிற்க வைத்து விட்டு சென்றிருக்கிறார்.

 

தகவலறிந்த காவல்துறையினர் நிகழும் இடத்திற்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து முதியவரை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது இளைய மகன் மற்றும் மகள் பராமரிப்பில் முனுசாமி தற்போது உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon