ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்!
திருச்சியில் ஊரடங்கு காரணமாக பிரசவத்திற்கு ரத்த தானம் பெற முடியாமல் தவித்த கர்ப்பிணிக்கு காவலர் ஒருவர் ரத்தம் கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அடுத்த ரெட்டிய பட்டியை சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளி ஏழுமலை தனது கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
சுலோச்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறையில் தான் பிரசவம் பார்க்கப்படும் என்றும் அதற்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படும் என்பதால் ரத்ததானம் செய்யும் நபரை ஏற்பாடு செய்து வருமாறு அனுப்பி வைத்தனர். ஊரடங்கு காலத்தில் ரத்ததானம் செய்யும் நபர் கிடைப்பது கடினம் என்ற நிலையில் சோகம் கலந்த முகத்துடன் கோவில்பட்டி சோதனைச்சாவடி வெளியே தம்பதி நடந்து வந்துள்ளன.

அவர்களிடம் விசாரணை நடத்திய காவலர்கள் காவலர் ரத்த தானம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுலோசனாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தம்பதிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலரின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
<





