--- --:--:-- --

போலீசாரை காரில் இடித்து தப்பித்த சட்டக் கல்லூரி மாணவர்கள்!

13

சென்னை கிழக்கு கடற்கரை தாம்பரத்தில் வாகன சோதனையில் பிடிபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் போலீசாரை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பி சென்றுள்ளனர். கிறிஸ்தவ கல்லூரி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஊரடங்கு உத்தரவை மீறியதாக அவ்வழியாக வந்த காரை மறித்து பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.

 

தொடர்ந்து சாவியை கேட்டபோது தர மறுத்து காரில் வந்த இளைஞர்கள் இருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அசந்த போது இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசார் மீது கார் மோதியதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி தப்பினர்.

 

இதை எடுத்து தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon