தாய்லாந்திலிருந்து வந்து ஈரோட்டில் கொரொனா பரப்பியதால் வழக்குப்பதிவு!
கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா வீசா மூலம் ஈரோடு வந்த 6 பேர் கொண்ட மதப் பிரச்சாரக் குழுவினர் கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி மசூதிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 2 பேர் தீராத சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு சரியாகாமல் தாய்லாந்துக்கு செல்ல முயன்றனர்.
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு சென்று அவர்களிடம் ஏற்பட்ட பரிசோதனையில் அவர் வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பது கண்டறியப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோட்டில் தங்கி இருந்த மற்ற 4 பேரும் கண்டறியப்பட்டு அவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஆறு பேரும் சென்ற மசூதிகள் மருத்துவமனைகள் கடைவீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தங்கியிருந்ததாகவும் பிரச்சாரத்திற்காக சென்றதாகவும் கருதப்பட்ட ஆறு வீதிகள் சீல் வைக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.
பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேரும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வரும் நிலையில் அவர்கள் மீது தொற்றுநோயை பரப்பியது. சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுற்றுலா விசா விதியை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு தங்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தோர் மக்களிடம் நெருக்கமாக பழகி பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் 6 பேரும் மீது ஈரோடு வட்டாட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரும் பூரணமாக குணம் அடைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.






