--- --:--:-- --

கடலின் மேற்பரப்புக்கு வந்த ஜெல்லி மீன்கள்!

9

கொரொனாத் தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததாலும் மீனவர்கள் வரத்து இல்லாததாலும் பிலிப்பைன்ஸ் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் காணப்பட்டன. கிருமித் தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் தெருக்களும் சாலைகளும் ஆள் அரவமின்றி காணப்படுகிறது. கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீனவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் கடற்பகுதியில் ஆயிரக்கணக்கான இளஞ்சிவப்பு நிற ஜெல்லி மீன்கள் வழங்குகின்றன.

 

கடல் தக்காளி என்று அழைக்கப்படும் இந்த வகை ஜெல்லி மீன்கள் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக ஆழ்கடல் பகுதியில் வசிக்க பழகிவிட்டதாக கடல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon