கொரொனாவால் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஐடி நிறுவன ஊழியர்கள்!
கொரொனாவை கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சிறு தொழில் முதல் உள்ள அனைத்து நிறுவனங்களும், நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கொரொனா ஊரடங்கும் பின்னணியில் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
சில ஐடி நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், இதற்கு எதிராக ஐடி ஊழியர் சங்கங்கள் களத்தில் குதித்துள்ளன. ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோன்ற தொழிலாளர் விரோதப் போக்கு ஏற்படக்கூடாது என்ற மத்திய அரசின் எச்சரிக்கையை பல ஐடி நிறுவனங்கள்அலட்சியப்படுத்துவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.
சட்டவிரோத நடவடிக்கை ஆளாகும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் அவசரகால தொலைபேசி எண்களை கர்நாடக மாநில பணியாளர் சங்கங்கள் வெளியிட்டுள்ளன.






