மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுகிறதா..? அமெரிக்காவில் 4 வயது புலிக்குட்டிக்கு அறிகுறி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலகம் முழுவதும் பரவி மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கும் கொரோனா வைரஸ், மிருகங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதால்பீதி எழுந்துள்ளது.அமெரிக்காவில் உள்ள பிரபலமான புரோன்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள 4 வயது புலிக்குட்டிக்கு கொரோனா அறிகுறி உறுதியான நிலையில், மேலும் 3 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு பாதிப்பு இருக்கலாம் என கூறப்படுவதால் பீதி எழுந்துள்ளது.

 

புதுவிதமான இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது மிருகங்கள் மூலம் பரவுவுதாக கூறப்பட்டது. ஆனால் மனிதர்களிடையே மட்டுமே இந்த வைரஸ் பரவுவதாக இப்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரபல மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி, சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பீதியால் அமெரிக்காவின் பிரபல புரோன்ஸ் மிருகக்காட்சி சாலை, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்குள்ள நாடியா என்ற 4 வயது புலிக்குட்டி கடந்த மாதம் 16-ந் தேதி முதலே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனால் அந்த புலிக்குட்டிக்கு விலங்குகள் நல மருத்துவர்கள் கொரோனா சோதனை நடத்தியதில், வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதன் முறையாக விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது இப்போது உறுதியாகியுள்ளது.மேலும் அதே மிருகக்காட்சியில் தலா 3 சிங்கம் மற்றும் புலிகளுக்கும் இந்த அறிகுறி இருக்கலாம் என்று நம்பப்படுவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

 

உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது அதிகமாகியுள்ளது. 3.5 லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாகி, பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டி, அந்நாடே பெரும் பதற்றத்தில் உள்ள நிலையில், விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply