நாகையில் 5 பேருக்கு கொரோனா உறுதி!
நாகையில் கொரொனா தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாகையிலிருந்து டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரொனா தொற்று உறுதியானவரின் குடும்பத்தினருக்கும் வைரஸ் பரவ வாய்ப்புகளை கருதி அவர்களை சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தனர்.
ஆனால் அவர்கள் அதனை மறுத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வீட்டிலேயே மாதிரிகளை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.






