--- --:--:-- --

பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனை நிர்வாகமே காரணம்!

6

பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைக்கு குழந்தைக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 27 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

குழந்தை பிறந்த மூன்றாவது நாளிலேயே கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தைக்கும் தாய்க்கும் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தாய் மற்றும் சேய்க்கு கொரொனா தொற்று ஏற்பட்டதற்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

 

மருத்துவமனையில் தாயும், குழந்தையும் இருந்த படுக்கையில் இருந்து வேறு படுக்கைக்கு மாற்றிக் கொள்ளுமாறு மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. எனவே படுக்கையின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon