மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கேமரா
சென்னையில் மக்கள் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். பலர் அனாவசியமாக உலா வருவதும் குறுகிய தெருக்கள் வீதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள் பலர் கூட்டமாக அமர்ந்து விளையாடுவதும், வெட்டி கதை பேசுவதும் தொடர்கிறது.
இவர்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் விதமாக மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாடவீதிகளில் தோட்டம் அருகே சாலை உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வரும் போலீசாரும் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.






