--- --:--:-- --

கொரோனா அறிகுறி : செல்ஃபி எடுத்து அனுப்பினால், உடனடி நடவடிக்கை

15

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கான புதிய செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. கொரொனா அறிகுறி உள்ளவர்கள் செல்பி எடுத்து செயலியில் அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களை கண்காணித்து புதிய செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொரொனா அறிகுறி உள்ளவர்கள் செல்ஃபி எடுத்து இந்த செயலியில் பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

கொரொனா பாதிப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் பரிமாற்றத்திற்காக இந்த பிரத்யேக செயலி உதவும் என்றும் கூறினார். தடுப்பு நடவடிக்கைகள் வீடு வீடாக சென்று சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆய்வு நடத்துவதாகவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon