--- --:--:-- --

காற்றில் கொரோனா பரவுகிறதா..! அதிர்ச்சி தகவல்!

14

நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்ற பிறகும் அந்த இடங்களில் காற்றில் கொரொனா கிருமிகள் பெருமளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளிலும் கொரொனா காணப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து காற்றில் வாயிலாகவும் கொரொனா பரவும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் இதுவரை எந்த மருத்துவ இதழிலும் வெளியிடப்படவில்லை. எனினும் கொரொனா நீடிக்கும் என்று ஆய்வு தகவலையடுத்து சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பான உடல் கவச ஆடைகள் மிகவும் அத்தியாவசியம் என்ற கருத்து வலுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon