டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா! மூடப்பட்ட மருத்துவமனை!
டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவமனை ஒன்று மூடப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனையை பாதையில் உள்ள பரிசோதனை மையங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து கிருமிநாசினிகள் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய உறவினர்கள் மூலம் அந்த மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அந்த மருத்துவரிடம் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




