--- --:--:-- --

மளிகைப்பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படும்!

5

புதுச்சேரியில் கொரொனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தை வணிகர் கூட்டமைப்புடன் இணைந்து புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

 

கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பொதுமக்கள் வெளியே சுற்ற வேண்டாம் என்றும் கூட்டம் கூட வேண்டாம் எனவும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 

இந்த நிலையில் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருகின்றனர். இதனை தடுக்க புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பினர் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதன்படி புதுச்சேரி அரசுடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

 

இதற்காக புதுச்சேரி முழுவதும் 23 நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் பட்டியலை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

 

அடுத்த ஆறு மணிநேரத்திற்குள் அவர்களது வீட்டிற்கு மளிகை பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்சம் 300 ரூபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும் இதற்காக டெலிவரி கட்டணம் எதுவும் வசூலிக்கப்படும் என்று வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon