--- --:--:-- --

ஊரடங்கு உத்தரவு கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும்

1

ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை கொரொனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர் மத்திய அரசு அறிவித்துள்ள உதவி தொகை விரைவில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இருப்பிடம் அமைத்து கொடுப்பதுடன் அவர்களின் வங்கிக் கணக்குகளில் உதவி தொகையை செலுத்த வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

 

அதைப்போல் கொரொனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே பாதிப்பு குறித்து தெளிவாக அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon