--- --:--:-- --

1000 ரூபாய்க்கு பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்!

6

மாநிலங்கள் கூறும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனா நிவாரண உதவி திட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் 1.70 லட்சம் கோடி ஒதுக்கியதற்க்கும், மாதத்தவணை மூன்று மாதங்களுக்குப் பிறகு வசூல் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி கூறி இருப்பதற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 

கொரொனாவை தடுக்க ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமில்லாமல் ஓரணியில் நின்று போராடுவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின் மாநிலங்கள் கூறும் நிதியை மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மேலும் அதிமுக அரசு அறிவித்துள்ள 3,280 கோடி நிதியுதவி வரவேற்பு தெரிவித்துள்ள ஸ்டாலின், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon