--- --:--:-- --

கொரோனா அச்சத்தால் சலூன் கடைகளை தவிர்க்கும் வாடிக்கையாளர்கள்

6

கொரொனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சவர தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா பாதிப்புகளை தடுக்க மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

ஆனால் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் ஒன்றான சலூன் கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்து விட்டதாக தெரிகிறது.கோவை மாவட்டம் ஆர்‌எஸ் புரத்தில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்குள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon