கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை கைது
சமூக வலைதளங்களில் கொரொனா குறித்து தவறான தகவல் பரப்பியதாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரொனா உள்ளதாகவும் கூறி அவர்களின் புகைப்படங்களுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருவதை போன்ற போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை செய்த போலீசார் குறித்து தவறான தகவல் பரப்பியதாக குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சுகுமார்,விஜயன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




