பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


மதுரையில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். அணை கல்மேடு என்ற பகுதியில் சிவா என்கிற குரங்கு சிவா என்கிற ரவுடி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

 

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ரவுடி குரங்கு சிவா மற்றும் வீடியோவில் அவனுடன் தோன்றிய நான்கு சிறுவர்களை சிலைமான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply